காரியாபட்டி: கோயில் வைகாசி பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண கணபதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனை ஒட்டி இன்று முக்குரோடு மாரியம்மன் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி பேருந்து நிலையம், பஜார், முருகன் கோயில், மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

மேலும் உற்சவர் சிலையான மாரியம்மனை தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து வந்தனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி