விருதுநகர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரியாபட்டி சாலையில் உள்ள பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இரு இளைஞர்களை போலீசார் விசாரித்தபோது, ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவரான மதுரையைச் சேர்ந்த அபினேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. அபினேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி