விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காளையார் கடைசில குளத்தைச் சார்ந்த ஞானசேகரன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள், ஞானசேகரன் மனைவி அணிந்திருந்த தங்க நகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், எம். ரெட்டியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.