விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 350 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் 200-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். போட்டியை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.