விருதுநகர்: முழு விசாரணை நடத்தப்படும்; அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் நடந்த பட்டாசு விபத்து குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில் வருந்ததக்க வகையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து முழு விசாரணை நடத்தப்படும்.

விபத்து நடந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் விபத்து நடந்த ஆலையின் போர்மேன் வீரசேகரன், மேலாளர் வைரமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி