திருச்சுழி நந்தவனத் தெருவில் முறையற்ற கழிவுநீர் வாறுகால் அமைப்பால் குடியிருப்புப் பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி, முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.