திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பத்தை அளித்துள்ளதாகவும், மக்கள் ஒரு மாயையில் மயங்கி ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்துவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், இது ஒரு "பிரக்சர்ட் வெர்டிக்ட்" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தோல்வி ஒரு படிப்பினையாக அமையும் என்றும், ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.