அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

இராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்கான யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி