தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ். மறைக்குளம் பகுதியில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி எஸ். மறைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், மறைக்குளம் கூட்டுறவு கடன் சங்க செயலாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி