விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் கல்குவாரி கிரசர் அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, வடபாலை, இலங்கிபட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. கல்குவாரி அனுமதி ரத்து செய்யப்படாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி