கார்த்திகை1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடைகளில் மாலை அணிந்து சபரிமலைக்கு 48 நாள் விரதத்தை தொடங்கினர். அதேபோல், திருச்செந்தூர், பழனி பாதயாத்திரை செல்ல முருக பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற உடைகளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்பா' கோஷமும், முருக பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' கோஷமும் எழுப்பி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி