விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நாளை மாலை திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்ட மாநாடு நடைபெற உள்ளது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ஆர். ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வர் ரேம்ப் வாக் செல்ல உள்ள பகுதி, விழா மேடை, பார்வையாளர் அரங்கு, திராவிட மாடல் திட்டங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை துணை முதல்வர் ஆய்வு செய்தார். நிர்வாகிகளுக்கான தொகுப்புகள் தயாரிப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.