மாற்றுத்திறனாளிகள் தினத்தைமுன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி நரிக்குடி ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்க கிளையின் சார்பில் எம். ரெட்டியபட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் M. கார்த்திக் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், தேவையான உபகரணங்கள் மற்றும் சலுகைகளை அரசாங்கங்கள் சுணக்கமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் விளக்க உரையாற்றினார். மாவட்ட மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி