காரியாபட்டி: வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் ராஜாசந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கருப்பையா, சவுண்டம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 

மேலும் பேச்சியம்மாளின் கணவர் முருகன், மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முருகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

ஏற்கனவே பேச்சியம்மாள் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது கணவரும் சிகிச்சைப் பெற்று உயிரிழந்த சம்பவம் தண்டியனேந்தல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி