திருச்சுழி: விஷம் குடித்து பலியான வாலிபர்..

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 27). இதற்கு முன் திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இவருக்கும் இவருடைய மனைவிக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாகவும், இந்நிலையில் இந்த பகுதியில் இருந்த கோவில் முன்பு விஷ மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

அருகில் இருப்பவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி