விருதுநகர்: ஊராட்சி ஒன்றியப் வளர்ச்சி திட்டப்பணிகள்; ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். 

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில், சிறு பாசன குளங்கள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ. 9.35 இலட்சம் மதிப்பில், முடையனூர் கரிசல் குளம் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கல்குறிச்சி ஊராட்சியில், சமத்துவபுரம் - கல்குறிச்சி சாலை அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ. 4.20 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, கல்குறிச்சி ஊராட்சியில், 15-ஆவது மானிய நிதிக்குழு சுகாதார திட்டத்தின் கீழ், ரூ. 60 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி