இந்நிகழ்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
டாக்டர் சங்கர சரவணன் (இணை இயக்குநர்), பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்; குழந்தைகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார். மேலும், "குழந்தைகள் இலக்கியத் திருவிழாவின்" தொடக்க விழாவில் எழுத்தாளரும், நடிகர் மற்றும் கதைச்சொல்லி என பன்முக ஆளுமை கொண்ட பவா செல்லதுரை சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.
இலக்கியத் திருவிழா நிறைவு விழாவில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை (சாகித்திய அகாடமி விருதாளர்) சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். எனவே, குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.