முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மகாளய அமாவாசையான இன்று(அக்.2) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். குண்டாற்றில் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுத்த பின்னர், ஸ்ரீ திருமேனிநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். திருச்சுழி நண்பர்கள் தன்னார்வக் குழுவினர் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்