உடன் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காரியாபட்டி பேரூராட்சி செயர்மன் செந்தில், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாந்தீபன், சப் இன்ஸ்பெக்டர் சமிளாபேகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கூறுகையில், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் நடவாமல் இருப்பதற்கும் சிசிடிவி கேமரா பெரும் உதவியாக உள்ளது. மேலும் தற்போது மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பொதுமக்களாகிய நீங்கள் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி