காரியாபட்டி: விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜே.ஜே. காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா வயது 58. இவர் சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கருப்பையா படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர் மேலும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி