இதே போன்று, பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் இதர உழவுக் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இம்முகாமில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள் நேரில் கலந்துரையாடிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை முகாம்களில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து அவ்வியந்திர உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி