தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் புகார்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம் பகுதியை சார்ந்தவர் முருகவள்ளி (20). இவருடைய அண்ணன் சந்தன குமார். முருகவள்ளி சிவலிங்கபுரம் பகுதியில் கணவர் வீட்டில் தூங்கும் பொழுது கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தனது தங்கையின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அண்ணன் முக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் முக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி