இந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் அதிமுக வேஷ்டி, சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை மாபெரும் வெற்றி பெற செய்வதற்கான ஆலோசனைகளை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒன்றிய கழகச் செயலாளர் உள்ளிட்டோர் வழங்கினர். இந்த கள ஆய்வின் போது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், காரியாபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் ரவுடி தொப்பை கணேஷ் என்கவுண்ட்டர்