நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் ஒட்டங்குளம் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் குறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து களஆய்வு மேற்கொண்டனர்.
அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் விளக்கமாக எடுத்துரைத்தார். ஆய்வின் போது மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சித்திக் அதிமுக கிளைக் கழக செயலாளர்கள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.