விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. இதனால், இந்த ஆபத்தான குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் 06.11.2025 முதல் tntenders.gov.in என்ற இணையதளத்தில் ஏல விவரங்களைப் பார்த்து பங்கேற்கலாம் என மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.