இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்தபட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இடத்தில் தீவன சாகுபடி செய்யக்கூடிய வாறு, குறைந்தபட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்றிருக்கக் கூடாது.
சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.