விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் முகாமானது 18.12.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19.12.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 18.12.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும், கள ஆய்வில் ஈடுபட்டு, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்குதடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.