சிவகாசி: சிறுவன், சிறுமிக்குபாலியல் தொல்லை; வாலிபருக்கு சிறை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த மாரிசாமி (29) என்ற வாலிபர், 10 வயது சிறுவன் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிசாமியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி புஷ்பராணி விசாரித்து, மாரிசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி