அதனால் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருக்கல்யாண திருவிழா இன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, 13 நாட்கள் நடைபெறும் இத்திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவையும், ஏப்ரல் 11-ம் தேதி காலை செப்புத்தெரோட்டம் மாலை ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து