கடந்த 20 நாட்களுக்கு முன்பு புஷ்பவல்லிக்கும் அஜித்குமாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுரைக்காய் பட்டியில் உள்ள தனது தாய் ராமலட்சுமி வீட்டிற்கு புஷ்பவல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் பாலகிருஷ்ணமூர்த்தி அஜித்குமார் ஆகியோருக்கிடையே ஜூலை 4 நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த அஜித்குமார் தனது தந்தையான பாலகிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், விசாரணை மேற்கொண்டதோடு, கொலையான பாலகிருஷ்ணமூர்த்தியின் உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்