ஸ்ரீவில்லிபுத்தூர்: மயிலை விழுங்கிய மலைப்பாம்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கி நகர முடியாமல் தவித்த நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து அதைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி