உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் மற்றும் யூஜிசி பரிந்துரைத்த ஊதிய உயர்வு 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்படுவதால் தமிழக முழுவதும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பி, தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்