அதன்படி வனத்துறை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் யானையை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தனர். பின்னர் யானை தங்கி இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள், யானைக்கு அளிக்கப்படும் உணவு குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். தற்போது வெயில் காலமாக இருப்பதால் யானையை தினமும் மூன்று முறை குளிக்க வைக்க வேண்டும் என பாகன்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் உணவாக தர்பூசணி பழங்கள் அதிக அளவு வழங்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் யானையின் உடல்நிலை குறித்து வழக்கமாக ஆய்வு செய்வோம். அதன்படி தற்போது ஆய்வு செய்தோம், மேலும் யானை நலமாக உள்ளது என்றனர்.