ஸ்ரீவில்லிபுத்தூர்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு....

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சேர்ந்த நல்லம்மை (68) என்பவர் தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரது வீடு புகுந்து 8 கிராம் நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது. கடந்த 2025 டிசம்பர் 11 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததை அடுத்து நல்லம்மை வந்து பார்த்தபோது திருட்டு நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி