இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கணேசன் (32), மருதுபாண்டி (27), மகாலிங்கம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த கணேசன், மருதுபாண்டி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.12,000 வீதம் ரூ.36,000 அபராதமும் கட்ட வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.