ஶ்ரீவில்லிபுத்தூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் சாவு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் மான்கள், இரவு நேரங்களில் சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கிருஷ்ணன் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு மான் உயிரிழந்தது. மேலும், ராஜபாளையம் ரோட்டில் மற்றொரு மான் படுகாயமடைந்தது. காயமடைந்த மானை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி