ஸ்ரீவில்லிபுத்தூர்: வெளிமாநிலத்தினரும் விரும்பும் தேங்காய்; விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு பகுதி பட்டாசு தொழில் உள்ள பகுதியாக இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

கூமாபட்டி வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பட்டுப்பூச்சி, பிளவக்கல், பெரியாறு அணைப்பகுதி, தம்பிபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் தேங்காய்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி