ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மையத்தின் நீண்ட கால உறுப்பினர் வெங்கடாச்சாரி ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதால் தலைமை ஆசிரியர் அவர்களை மக்கள் சேவை மைய அமைப்பின் தலைவர் திரு M. திருமூர்த்தி, செயல் தலைவர் P. பாலகிருஷ்ணன், செயலாளர் G. ரவீந்திரநாதன், பொருளாளர் M. தனலட்சுமி, செயல் வீரர் திரு M.S. பாண்டியராஜா ஆகியோர்கள் சந்தித்து அன்னாரது தலைமை ஆசிரியர் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார்கள்.