இந்த நிலையில், பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 25-ந் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.