அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற சுரேஷ் ராஜா (வயது 24) இவரது நண்பர் பிரகாஷ் (வயது 27)நல்ல நண்பர்களாக இருந்தவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து சுரேஷ் என்ற சுரேஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியே அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறார்.இது தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சுரேஷ் என்ற சுரேஷ் ராஜாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று ஜூன் 10 தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதாகர் நண்பரை கொலை செய்த சுரேஷ் என்ற சுரேஷ் ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.