வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிகுடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிகண்டன் அருகே ஆத்தூர் உள்ள கிராமப் பகுதியில் சென்றபோது, அவரை முத்துராஜ் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து சிறீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வாலிபரை கொலை செய்த முத்துராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.