ஶ்ரீவி: தீப்பிடித்து தொழிலாளி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லிப்புதூரை சேர்ந்த ராஜாராம்(63) என்ற தொழிலாளி, வீட்டில் கட்டிலில் படுத்து பீடி புகைத்தார். அப்போது, அணைக்காத பீடியை மெத்தையில் போட்டதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகி காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், ராஜாராம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி