இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கணக்கெடுப்பு துவங்கியது. மாவட்டத்தில் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம், பெரியகுளம், செங்குளம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி கண்மாய்கள், பிளவக்கல் அணை, சுந்தரபாண்டியம் கண்மாய்கள், ஆலங்குளம், வெம்பக்கோட்டை அணை, சிவகாசி பெரியகுளம், உலக்குடி, இருக்கன்குடி அணை ஆகிய 23 ஈரநிலங்களில் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.
பைனாகுலர்கள் மூலம் தொலைதூரத்தில் உள்ள நீர்ப்பறவைகளை கண்டறிந்து அதனை பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து கணக்கெடுப்பு தன்னார்வலர்கள் சேகரித்த தரவுகள் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு நீர்பறவைகள் வருகை, எண்ணிக்கை விபரங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.