விருதுநகர்: கிராம நிர்வாக அலுவல சங்கத்தினர் போராட்டம் - வீடியோ

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சாத்தூர் அருகே இ. குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் அஜிதா பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பிப்ரவரி 17 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 20 பேர் கலந்து கொண்டனர். 

சாத்தூர் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இ. குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் அஜிதா பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரியும், மூன்று மாத காலமாக அறிக்கைகள் மூலம் தகவல் அளித்த கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கைகளை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததாகவும், கனிமவள துறையை கையில் வைத்து மாவட்ட ஆட்சியர் மட்டும் வருமானம் பார்ப்பதாகவும், தன்னுடைய தவறை மறைக்க அலுவலர்களை தண்டித்து ஆட்சியர் வேஷம் போடுவதாகவும், நிர்வாக திறமையற்ற ஆட்சியரை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கனிம வளத்துறையை கலைத்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி