ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு காவல் நிலைய சரகத்தில், சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த தேனியைச் சேர்ந்த செண்பகராஜ் (38) என்பவரை விசாரித்தனர். அப்போது, அவர் கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே திருநாவுக்கரசு என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.