விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலப்பாளையம் பகுதியில் பேச்சியம்மாள் (65) என்பவரது வீட்டில் சுமார் 43,000 ரூபாய் மதிப்புள்ள 63 கிலோ புகையிலை பொருட்களையும், 1,11,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் மற்றும் குமார் ஆகிய இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.