இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சம்பவத்தன்று விஜய முருகன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று காரில் வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து மோதி விஜய முருகனை உருட்டு கட்டைகளால் விஜயா ராம், ராமர், கருப்பசாமி, மணிக்குமார் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தாக்கியதில் விஜய முருகன் படுகாயம் அடைந்து இறந்து போனார்.
இது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது விஜயராம் இறந்து போனார். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, குற்றவாளிகள் ராமர், கருப்பசாமி, மணிக்குமார் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.