ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே, 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்த கூலித் தொழிலாளி சுப்புராஜ் (26) மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுப்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.