விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த 35 ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் சென்றபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, ஒரு கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.