ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம், வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட துலுக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சன் என்பவரின் மகன் அருண்குமார் என்பவருக்கும், அழுகுதேவேந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பூலார் என்பவரின் மகன் ஜெயகுமார் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகராறில் ஜெயக்குமாரை அருண்குமார் என்பவர் அரிவாளால் வெட்டி காயப்படுத்தி கொலை முயற்சி செய்ததாக கடந்த 26.10.2020 ஆண்டு வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு (PCR) நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஜூன் 13 ஆம் தேதி அருண்குமாரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி சுதாகர், குற்றவாளி அருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.